
- This event has passed.
வருடாந்த திருக்குளிர்த்தி

வருகின்ற 18/4/2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜெயதுர்க்கா துர்க்காதேவி ஆலயத்தின் தொன்மையான விழாவாகிய திருக்குளிர்த்திவிழா நடைபெறவுள்ளது. எங்கள் வாழ்வை வளமாக்கிய எம்பெருமாட்டிக்கு நன்றி செலுத்தும் விழா நாங்கள் வேண்டுவனவற்றை வரமாகத் தரும் கருணைத் தாயிற்கு நன்றி செலுத்துவது அடியவர்களாகிய எமது கடமை வருடாவருடம் பொங்கி வழிவது போன்றும் எங்கள் வாழ்வில் செல்வமும் நற்கீர்த்தியும் பொங்கும்என்பது எல்லோரும் அறிந்ததே ஒற்றுமையையும் பரந்த மனப்பாண்பையும் ஒன்றுகூடல்மூலம் வளியமைப்பதே வருடாந்தவழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு இஷ்டதெய்வ வழிபாடு பாரம்பரிய தேவவழிபாடு ஆராதனாதேவ வழிபாடு என்ற வழிபாட்டு முறைகளிலேஎல்லாவற்றிற்கும் பொதுவான வழிபாடு பொங்கல் வழிபாடே எம்மை ஈன்ற தாயாகிய உலகநாயகியாக விளங்கும்தாயை மனம் குளிரவைக்கும் வழிபாட்டு முறைநாங்கள் பொதுவாக தோச பரிகாரத்திற்காகவும் எமது தேவைகளை வேண்டுவதற்காகவுமே ஆலயம் வந்து தாயை வேண்டுவோம் .ஆனால் குளிர்த்தி விழா நாங்கள் இறைவியை மனம்குளிரவைப்பது ஆகவே எல்லோரும் ஊர் கூடி உலை வைத்துஇறைவியை குளிரவைத்து எம் வாழ்வை வளமாக்குவோம்மனம் வாக்கு காயமாகியவை அரிசியாகவும் நீராகவும் சர்க்கரையாகவும் எங்கள் குலதெய்வத்திற்கு படையலிட்டுநன்மனத்திராக மேன்மைமிகு செயற்திறன்மிக்கவராகநற்கீர்த்தியோடு பெருவாழ்வு வாழ்வீர்களாகஅன்னையிடம் வாருங்கள்…ஓம் சக்தி தாயே…