“இந்து மிஷன் மிசிசாகா” என்பது கனடாவில் வாழும் இந்து சமயத்தினை பின்பற்றும் மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாகவும் சைவ–தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை பேணும் பிரதான தளமாகவும் செயலாற்றுகின்றது.
மிசிசாகா இந்து மிஷனின் கீழ் அமையப்பெற்ற ஜெயதுர்க்கா தேவஸ்தானம் துர்க்கைஅம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு ஆலயமாகும். இது ஒன்ராறியோவில் வாழும் இந்துமக்களின் ஆன்மிகநெறிக்கு வழிகாட்டியாய் இருப்பதுடன் சமூக ஒருங்கிணைப்புக்குரியஅரங்கமாகவும் சைவ–தமிழ் சமூக கலாசார நிகழ்வுகளுக்கான மையத்தளமாகவும்செயற்படுகின்றது.
இங்கே நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்…
- நித்திய பூசைகள்
- வாராந்த விசேட பூசை (சுக்கிரவார உற்சவம்)
- விசேடயாகங்களும் ஹோமங்களும்.
- ஆங்கில மற்றும் தமிழ் புதுவருடம், மாசிமகம், தீபாவளி பண்டிகை, வசந்த நவராத்திரி, பங்குனி உத்தரம், நவராத்திரி, கந்தசஷ்டி விரதம் போன்ற வருடாந்த விழாக்கள்
- சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கான சைவநெறி மற்றும் தமிழ்மொழி வகுப்புக்கள்
- இசை மற்றும் நடன வகுப்புக்கள்
- இந்து மத கலந்துரையாடல்கள்
- திருமண மற்றும் தியான சேவைகள்
- ஆன்மிக ஆலோசனைகள்
- தர்ம சேவைகள் மற்றும் அறக்கட்டளை திட்டங்கள் அமுலாக்கல்.